File Photo: Facebook/St. Anthonys Shrine Colombo-13
இலங்கையிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரட்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நத்தார் பண்டிகையையொட்டியே பொலிஸ் மா அதிபர் இந்த ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல், பொலிஸ் மா அதிபரினால் பிராந்திய பொலிஸ் அத்தியட்சர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவும், நாளை காலையும் தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் நடக்கவுள்ளதால் அந்த தேவாலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.