
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 33 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து, தீபம் காட்டி, அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதனைதொடர்ந்து, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் இராசேந்திரம் செல்வராஜா ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.