January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவிசாவளை, ருவான்வெல்ல உள்ளிட்ட மேலும் 3 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கொழும்பு மாவட்டத்தின் கொஸ்கம மற்றும் அவிசாவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளும் கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரேதேசங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே தனிமைப்படுத்த தீர்மானித்ததாக கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவிசாவளையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.