கொரோனா வைரசினைக் கட்டுப்படுத்தக்கூடிய நான்கு வகையான கொரோனா தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
அஸ்டிராஜெனேகா, மொடேர்னா, பைசர் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய ஆகிய தடுப்பு மருந்துகள் நாட்டில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சிப் பேரவையின் தலைவர் டொக்டர் ஹேமந்த தொடம்பஹல தெரிவித்துள்ளார்.
குறித்த நான்கு தடுப்பு மருந்துகளில் நாட்டிற்கு பொருத்தமான மருந்தினை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சியிடம் தேசிய ஆராய்ச்சிப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் 2021 மார்ச் மாதத்திற்குள் நாட்டிற்கு பொருத்தமான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஹேமந்த தொடம்பஹல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பாக இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவை, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.