
இலங்கையின் ஆளுங்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, விவசாய அறிவியல், குடிநீர் மற்றும் சுகாதார, கால்வாய் வசதிகள் பற்றியும் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாகவும் ,யாழ்ப்பாணத்திற்கு தேவையான வீட்டுத்திட்டங்கள் சம்மந்தமாகவும் கல்வி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மையத்தின் கட்டுமானம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு அங்கஜன் இராமநாதனால் நினைவுபரிசு ஒன்றும் இதன்போது வழங்கப்பட்டது. இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்கள்.
