November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘2021 புதிய கல்வியாண்டில் அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்புக்குத் தரமுயர்த்த நடவடிக்கை’

file photo: Twitter/ UNICEF Sri Lanka

இலங்கையில் 2021 புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு தரமுயர்த்தப்பட வேண்டுமென்று கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலைக் கல்வியாண்டு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், கல்வி அமைச்சு பாடசாலைகளின் அதிபர்களுக்கு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

நிறைவடைந்த கல்வியாண்டில் பாடங்கள் முடிக்கப்படாமல் இருக்குமாயின், அந்த பாடங்களை 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை பாடசாலைகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான விடுமுறை இன்றுடன் ஆரம்பமாகின்றது.

புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் 2021 ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை திறப்பது தொடர்பாக இதுவரையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு நீண்ட நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையினால், 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைப் பரீட்சைகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.