July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் மூன்று மாவட்டங்களின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

file photo: www.nbro.gov.lk

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 5 பிரதேச செயலாளர் பிரவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் கோட்டபொல, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் கஹவத்தை ஆகிய பகுதிகளுக்கே மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலிய, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.