
இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆளும் கட்சியின் குழு கூட்டத்தில் பிரதமரினால் நாட்டில் மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்யும் வகையில் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பான யோசனையை முன்வைக்கப்பட்டது.இந்த யோசனையை அரசாங்கத்தில் பெரும்பாலானவர்கள் வரவேற்றுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக வேறு தரப்பினரின் யோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனால் அந்த சட்டத்தை கொண்டு வரும் நடவடிக்கையை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.