May 14, 2025 17:45:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்பு!

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் ஆளொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகிலுள்ள, தியத உயன பாலத்திற்கு கீழிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் யாருடையது என்று அடையாளம் காணப்படவில்லை.உயிரிழந்தவரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.