February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காங்கேசன்துறை துறைமுகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை

வரலாற்று பெருமைமிக்க யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை – காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்ட அதேவேளை,அடிப்படை வேலைகளை முடித்து கொண்டு விரைவில் துறைமுகம் திறக்கப்படும் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ் அபிவிருத்தி திட்டமானது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.