January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Mt New Diamond’ கப்பலை 200 கடல் மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை!

இலங்கையின் கிழக்கு கடலில் தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய்க் கப்பல் இருந்த கடல் பகுதியில் தென்படும் எரிபொருள் படிமம் அந்தக் கப்பலின் எரிபொருள் தங்கியில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்டவை என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் கப்பலில் உள்ள மசகு எண்ணெய் தாங்கியில் எந்தவித கசிவும் ஏற்படவில்லை என்று கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் கடற் படையின் சுழியோடிகளை பயன்படுத்தி கப்பலின் கீழ் பகுதியை ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கப்பலால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க, கப்பலை நாட்டில் இருந்து 200 கடல் மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்லுமாறு இலங்கை சட்டமா அதிபர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.