July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்து, கட்டாய எரிப்புக்கு உட்படுத்தப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

குழந்தை நோயுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் உயிரிழந்து, எரிக்கப்படுவது வரையான மருத்துவ அறிக்கைகளை வெளியிட உத்தரவிடுமாறு கோரியே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், லேடி ரிஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், தமது ஒப்புதலும் இன்றி குழந்தை எரிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.