January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள்” – வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது, தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நிதி அமைச்சில் இன்று நடைபெற்ற அமைச்சின் முன்னேற்றம் பற்றிய மீளாய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு அறிவித்துள்ளார்.கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.