June 14, 2025 15:09:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் நீதித்துறை அமைச்சரை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலேய்னா டெப்லிட்ஸ் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் குவிதல், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சிறைச்சாலைகளில் நெரிசலை குறைத்தல், நீதிபதிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

சட்டத்தரணி பிரியந்த மாயதுன்ன, நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜனக ரணதுங்க ஆகியோர் நேற்றைய இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக நீதி அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது