January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து பேசாலை மக்கள் போராட்டம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து மன்னார்,பேசாலை மக்கள் இன்று (9) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி வந்து தமது கடல் வளங்களை அழித்து வருவதாகவும் அத்துடன் படகுகள் மூலம போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பேசாலை கிரமத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் கடற்தொழிலுக்குச் செல்லாமலும் குறித்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்களை மூடியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு அருட்தந்தையர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் ஆகியோர் ஆதரவளித்தனர்.