January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் வெள்ளம்: நிலைமைகளை ஆராய்ந்தார் பிள்ளையான்

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பின் சில பகுதிகளை பார்வையிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துறை சந்திரகாந்தன், அங்கு வெள்ள நீரை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கடந்த  இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் பருவப்பெயர்சி மழையின் காரணமாக கூளாவடி, ஊறணி, இருதயபுரம் உட்பட பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.
இன்று இந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட சந்திரகாந்தன் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் , அடுத்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் சகல வீதிகளுக்கும் நீர் வழிந்தோடக் கூடியதான கால்வாய்கள் மற்றும்  பாலங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்மொழிவுகள் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் எனவும் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.