
இலங்கையில் பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில், தேவை ஏற்படாத சந்தர்ப்பத்தில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவோ அல்லது தனிமைப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதென இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான வரையறைகளை விதிக்க வேண்டி ஏற்பட்டால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.