இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை இவ்வருடம் டிசெம்பர் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில், மேலும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட இருப்பதால் ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் தமது வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.