
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன், பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட 40 அணி மாணவர்களினால் திருவெண்பா ஒதுதல் நிகழ்வு இன்று அதிகாலை ஆரம்பிக்கபட்டது.
கொரோனா கால சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தங்களுடன் அனைத்து மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறும், அனைத்து விரதங்களையும் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்க பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.