
கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 95 வர்த்தக நிலையங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன.
அந்த வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்துமாறு, நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் நேற்றிரவு வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.