File Photo: Twitter/ Srilanka Red Cross
இலங்கையில் கொரோன தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 17, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 68 வயது ஆணொருவர் 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆணொருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 77 வயது ஆணொருவர் 18 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அத்துடன் மக்கொன பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்ணொருவர் 19 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
மேலும், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 83 வயது ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொவிட் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவர்களின் உயிரிழப்புகளுக்கு கொவிட் தொற்றால் ஏற்பட்ட நிமோனியா நிலைமையே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.