February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மறைமுக சக்தியொன்று இருந்துள்ளது” – ஹக்கீம்

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் சஹ்ரான் குழுவினருக்கு புறம்பாக வேறு ‘மறைமுக சக்தி’ ஒன்றே இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தவென வேறு ஒரு அமைப்பே ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நாட்டை பலவீனப்படுத்தும் அவர்களின் நோக்கம் நிறைவேறியுள்ளது.

குறிப்பிட்ட மறைமுக குழு, சஹ்ரான் ஹாசிமையும் அவரது குழுவையும் இந்த தாக்குதலுக்காக பகடைக் காயாக பயன்படுத்தியுள்ளது.இதன்படி தங்களை மறைத்துக்கொள்வதற்காக ஐ. எஸ் அமைப்பின் பெயரை அந்த குழு பயன்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.