இலங்கை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக நீதிமன்றங்கள் மற்றும் நீதவான்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் சுமார் 8 இலட்சம் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் அவற்றை துரிதமாக விசாரணைக்குட்படுத்தினாலும், 15 வருடங்கள் அளவில் எடுக்கும் என்றும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைப்பதற்காக 8,000 கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், முதற்கட்டமாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஒரு வருட காலத்திற்குள் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.