யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பெற்றிக் டிறஞ்சன் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு கடந்த 16 ஆம் திகதி, மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 3 வாக்குகளனால் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இதனால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய முதல்வர் இம்மானுவேல் பதவியை இழக்க நேரிட்டது.
இதனைத் தொடர்ந்து யாழ். மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.