January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின!

இன்று அதிகாலை முதல் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது.இந்நிலையில் கொழும்பு நகரில் மாளிகாவத்த , ஆமர் வீதி , மருதானை , வாட் பிளேஸ் , தும்முள்ள சந்தி , பேஸ்லைன் வீதி ஆகிய வீதிகளில் பல இடங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த வீதிகளின் ஊடாக கார் , ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்களுக்கு பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வெள்ள நிலைமையால் வீதிகளில் கடும் வாகன நெரிசலும் நிலவி வருகிறது.