January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெடிகுண்டு தொடர்பாக வதந்தி பரப்பிய ஒருவர் கைது!

கத்தோலிக்க தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் குண்டுவெடிப்புக்கு இடமிருப்பதாக போலியான தகவல்களை பரப்பிய ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிகம்பிட்டிய பகுதியை சேர்ந்த 31 வயதுடைய குறித்த சந்தேக நபர், கட்டான பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆங்கிய மொழியில் குறித்த தகவலை பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டு வெடிப்பு இடம்பெற வாய்ப்பு உள்ளதால் ஆராதனைகளை கலந்துகொள்ள வேண்டாம் என, குறித்த வாட்ஸ்அப் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலியான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார்.

அத்துடன், சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.