January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவு!

இலங்கையில் பல மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது. இன்று காலை வரையில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பில் 121 மில்லிமீட்டர் , காலியில் 112 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலில் 12 மாவட்டங்களில் மழையுடனான வானிலை தொடருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு , களுத்துறை , கம்பஹா , கேகாலை , இரத்தினபுரி , கண்டி , நுவரெலியா , மாத்தளை , குருநாகல் , புத்தளம் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிக மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.