July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

File Photo: nbro.gov.lk

இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த மாவட்டங்களில் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய இடங்களில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் பல பிரதேசங்களில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்திலும் பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமென்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.