April 30, 2025 9:11:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆம் திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று முதல் போராட்டம்!

அரசாங்கத்தின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (08) முதல் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

நேற்று சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் 20 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் போராட்டங்களை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.