ஒரு வருட காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே பஸில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் காலங்களில் இலங்கையில் சகல துறைகளையும் மேம்படுத்தி, அபிவிருத்தி யுகத்தை ஏற்படுத்தும் வகையில் ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ எனும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரவு – செலவு திட்ட யோசனைகளை முன்வைக்கும் போது நாட்டின் அபிவிருத்தியுடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.