May 28, 2025 15:03:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் பல குடும்பங்கள் பாதிப்பு!

File Photo

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கடும் மழை மற்றும் வீசிய பலத்த காற்று காரணமாக கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பகுதிகளில் உள்ள 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.