எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியனான ‘ஜப்னா ஸ்டாலியன்ஸ்’ அணி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
யூரா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ். துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
வாகனத் தொடரணி மூலம், மேள வாத்திய இசையுடன் வீரர்கள் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் போது வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜேராஜ் ஆகிய வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ரதீபனும் கௌரவிக்கப்பட்டனர்.
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.