April 24, 2025 9:39:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டுக்கு கடத்த வைத்திருந்த 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது!

புத்தளம் – பாலாவி பிரதேசத்தில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய காரொன்றை சோதனையிட்ட போது அதற்குள் இருந்து 10 கிலோ தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் ஆசனத்திற்கு கீழே சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.இதன் பெறுமதி 11 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.