
இலங்கையில் அரச நத்தார் நிகழ்வுகள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகலில் இன்று கொண்டாடப்பட்டுள்ளது.
இம்முறை அரச நத்தார் கொண்டாட்டங்கள் குருநாகல் புனித பாத்திமா தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அகில இலங்கை கத்தோலிக்க மதப் போதனைப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் இதன்போது நடைபெற்றுள்ளது.
அரச நத்தார் தின நிகழ்வில் பேராசிரியர் துபுல்லே ஷீலக்கந்த தேரர், குருநகால் பேராயர் தேவப் பேராசிரியர் ஹெரால்ட் அன்டனி பெரேரா, பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.