January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்

அரசாங்கத்தின் ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பேராசிரியர் நாலக்க கொடஹேவா தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த அபிவிருத்திப் பணிகள் கட்டம் கட்டமாக இடம்பெறவுள்ளதுடன், அதன் முதல் கட்டமாக  ஹட்டன், கினிகத்தேனை நகரும், இரண்டாம் கட்டமாக கொட்டகலை நகரும், மூன்றாம் கட்டமாக தலவாக்கலை நகரும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

This slideshow requires JavaScript.

விசேடமாக நகர அலங்காரம், பூங்காக்கள், நடை பாதைகள், பார்வை கூடங்கள், கவர்ச்சிகரமான வர்த்தக நிலையங்கள்,  உணவகங்கள் மற்றும் தங்கு விடுதிகள் ஆகியன இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க,  இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர பிரதேச சபை உறுப்பினர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.