January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொதுஹர முதல் கலகெதர வரையான நிர்மாணப் பணிகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 31.7 கிலோ மீட்டர் நீளமான மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கு பெருந் தெருக்கள் அமைச்சு 142.5 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில், பெருந் தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.