
இலங்கையில் சமூக ஊடக பாவனையாளர்களைப் பதிவுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி ஊடக வெளியீட்டு செயலக ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய முரண்பாடுகளே, சமூக ஊடக பாவனைகளுக்கு கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவுசெய்வதற்கான வேலைத்திட்டமொன்றை வெகுசன ஊடக அமைச்சு தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.