November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண்டிகைக் காலத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ். மாவட்ட மக்களுக்கு கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை மிகுந்த அவதானத்துடன் கொண்டாடுமாறு  யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன அங்குள்ள மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் முன்னரே அறிவித்துள்ளது. அதன்படி தேவாலயங்களில்  மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வழிமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த கால கொண்டாட்டங்களைப் போலல்லாது கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டு தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்போது பொதுமக்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதாரப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.