கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மேல், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், குறித்தப் பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.