July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் !

அமெரிக்க இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அரசியல் பிரதிநிதியுமான ரோஸ்மேரி ஏ. டிகார்லோ எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்  சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர்  2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேலேயே அவர் இலங்கைக்கான இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.