பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
நிலவும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினரின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் மக்களை விழிப்பூட்டுமாறு பிரதமர் கொழும்பு ஆயரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது கொழும்பு அருட்தந்தை பெரி ப்ரோஹியர், கொழும்பு மறைமாவட்ட செயலாளர் ராஜன் ஆசீர்வாதம் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சட்ட அதிகாரி ரொஹான் எதிரிசிங்க, அருண் கமலத்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.