May 26, 2025 4:03:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்புக்கு எதிராக புத்தளத்தில் போராட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸால்  உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக இன்று புத்தளத்தில்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் தில்லையடி ரத்மல்யாயப் பிரதேசத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது புத்தளம்- சிலாபம் பிரதான வீதியில் ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்,  கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் நடைமுறைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் கபன் சீலையை கட்டியும் அவர்கள் உடல்களை எரிக்கும் நடைமுறைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.