வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோ வைரஸ் தொற்று பரவல் காரணமாக அந்த மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் நாளை முதல் மறு அறிவித்தல் வரையிலும் மூடுமாறு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பொதுச் சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஏற்படும் தொற்றுப் பரவல் ஆபத்தினைக் கருத்திற் கொண்டு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த சந்தைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தை வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி வியாபாரத்தை பரவலாக்கி வீதியோரங்களில் அல்லது தமது வதிவிடங்களில் அல்லது நடமாடும் வியாபாத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.