
இலங்கையின் மேல் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பொது மக்கள் பொறுப்புடனும், சுய கட்டுப்பாடுகளுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், பண்டிகைக் காலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது தொடர்பில் எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.