சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் பாலித கோஹன, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி சீனாவை சென்றடைந்த அவர், 16 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்கு சென்ற பேராசிரியர் பாலித கோஹனவை, பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.
சீனாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பாலித, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்திருக்கின்றார்.
மேலும் அவர் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 6 ஆவது குழுவான சட்டக்குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பதுடன், இதற்காக தெரிவுசெய்யப்பட்ட முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ambassador- designate of #SriLanka 🇱🇰to #China🇨🇳, Dr. Palitha Kohona, arrived in China, on 15.12.2020 and virtually assumed duties on 16.12.2020. He was welcomed enthusiastically by the staff of the Embassy as the Mission was without a formal head for some months. pic.twitter.com/ScruML15o5
— Sri Lanka Embassy in China (@SLembassycn) December 16, 2020