லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் பாரூக் அஸ்லம் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்ட முறைப்பாடொன்றுக்கு அமையவே, இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.