
இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் விசேட ஊரடங்குச் சட்டமோ, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவோ பிறப்பிப்பது குறித்து எவ்வித தீர்மானங்களும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களில் விசேட ஊரடங்கு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுமா? என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 22, 23 ஆம் திகதிகளில் நாட்டு நிலைமையை அவதானித்தே, இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்றிணைந்து விநோதமாக இருப்பதே பண்டிகைகளாக இருந்தாலும், கொவிட்- 19 வைரஸ் பரவல் சூழ்நிலையில் அவ்வாறு செய்ய முடியாது என்பதையும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, பண்டிகைகளை அமைதியாக அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.