January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு இலகு கடன் திட்டம் அறிமுகம்

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு நிவாரண வட்டி வீதத்தில் கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
10 மாதங்களில் செலுத்தி முடிக்க வேண்டிய நிபந்தனையுடன், 3 பிரிவுகளின் கீழ் இந்தக் கடனுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மாதமொன்றுக்கு ரூபா. 50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் பெறுபவர்களுக்கு கடனுதவியாக 50,000 மும், மாதமொன்றுக்கு சம்பளம் அல்லது வருமானமாக ரூபா. 25,000- 50,000 வரை பெறுபவர்களுக்கு ரூபா. 25,000 மும், மாதமொன்றுக்கு ரூபா. 25,000 க்குக் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு ரூபா. 10,000 வரையும் கடனாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இப்புதிய கடனுதவிகளை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் சமூர்த்தி வங்கிகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள், தமது நிறுவனத் தலைவரின் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை, பணிபுரியும் இடத்திற்கு அருகிலுள்ள வங்கிகளில் சமர்ப்பிப்பதன் ஊடாக கடனுதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி கடனுதவிக்கான மாதந்த வட்டி விகிதம் 0.625 என்பதோடு, கடன் தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையான காலகட்டத்தில், ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.