January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹர சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த நான்கு கைதிகளின் உடலை எரிக்க நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த நான்கு கைதிகளின் உடலை எரிப்பதற்கு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தை ஆராயும் நிபுணர் குழு, மேற்படி நான்கு கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை வத்தளை நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை வன்முறையில் 11 சிறைக் கைதிகள் கொல்லப்பட்டதோடு, அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தால் ஏற்பட்ட காயங்களே, இந்த நான்கு கைதிகளின் மரணத்துக்கு காரணமென்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.