
நேற்று இரவு முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த முடக்கல் நிலை நீக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் அறிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று வலிகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த உடுவில் கல்விக் கோட்டத்துக்கு உள்பட்ட 33 பாடசாலைகளும், தெல்லிப்பழை கல்விக் கோட்டத்துக்கு உள்பட்ட 40 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் எனவும் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.